நன்றியை மாறி மாறி பரிமாறி கொண்ட சிம்பு-கவுதம் மேனன்

  • IndiaGlitz, [Tuesday,September 13 2016]

கவுதம் மேனன் நடிப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் சிம்புவும், கவுதம் மேனனும் ஒருவருக்கொருவர் நன்றியை பரிமாறி கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஒரு நல்ல படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு அளித்ததற்கு கவுதம் மேனனுக்கு சிம்புவும், இந்த படத்தை முடிக்க நல்ல முறையில் ஒத்துழைப்பு தந்த சிம்புவுக்கு கவுதம் மேனனும் நன்றி தெரிவித்து கொண்டனர்.
சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'தள்ளிப்போகாதே' என்ற பாடல் இல்லாமலேயே படம் வெளியாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் பின்னர் இருவரும் சமாதானமாகி கடந்த ஒரு வாரமாக தாய்லாந்தில் இந்த பாடலின் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதால் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.