சிம்பு - அஸ்வத் மாரிமுத்து படத்தில் 'கோட்' நாயகியா? இயக்குனர் அளித்த விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ‘கோட்’ படத்தின் நாயகி நாயகியாக நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்தது. ’ஓ மை கடவுளே’ என்ற படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’டிராகன்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சிம்புவின் படத்தை இயக்குவார் என தெரிகிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 27-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதற்குள் இந்த படத்தின் நாயகி ‘கோட்’ படத்தில் நடித்த மீனாட்சி சவுத்ரி என்று சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாகவும், முன்னணி நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், என்னுடைய அடுத்த படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பதை தவிர, வேறு எந்த நடிகர், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் இன்னும் உறுதி செய்யவில்லை. உறுதி செய்தவுடன் உங்களுக்கு நாங்கள் முதலில் தகவலை பகிர்ந்து கொள்வோம். உங்களுடைய கோரிக்கைகளும் நாங்கள் ஏற்கிறோம்; கண்டிப்பாக உங்களை இந்த விஷயத்தில் நாங்கள் ஏமாற்ற மாட்டோம்," என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து, மீனாட்சி சவுத்ரி உள்பட, சிலர் இந்த படத்தில் இணைவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Hello friends and str fans ! Except STR , production and myself nothing else is finalised ! If anything we finalise we ll be the first one to share the news with u :) but we are HEARING you 🔥 u ll never be disappointed 👍
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) October 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments