சிம்புவுடன் மோதும் அருண்விஜய்: அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாகும் படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு மற்றும் அருண் விஜய் படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாக உள்ளதை அடுத்து இரண்டு படங்களும் அதிரடியாக மோத உள்ளன
சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் டிரைலர் செப்டம்பர் 2 ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் இதற்காக பிரமாண்டமான அரங்குகள் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளதால் பெரும்பாலான திரையரங்குகள் இந்த படத்திற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிம்புவின் ‘வெந்து வெந்து தணிந்தது காடு’ ரிலீசான அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி அருண்விஜய்யின் ’சினம்’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. அருண்விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ திரைப்படத்தை ஜிஎனார். குமரவேலன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்து கலக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here it is!!?? A story that needs to be told!!
— ArunVijay (@arunvijayno1) August 22, 2022
#Sinam releasing worldwide on Sept 16th.
#SinamfromSept16 @MSPLProductions @gnrkumaravelan #Vijaykumar #PallakLalwani @kaaliactor @gopinath_dop @shabirmusic @madhankarky @silvastunt @DoneChannel1 @Muzik247in @CtcMediaboy pic.twitter.com/X3JwhU21za
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments