நயன்தாரா திருமணத்தை நானே நடத்தி வைப்பேன். சிம்பு அதிரடி பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
பலவிதமான தடைகளை கடந்த வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் சிம்புவின் 'வாலு' சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு, இயக்குனர் விஜய் சந்தர் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பிரஸ்மீட்டில் 'நயன்தாராவுக்கும் 'நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இது உண்மையாக இருந்தால் உங்கள் நிலை என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த சிம்பு, "ஒருவேளை அது உண்மையாக இருந்தால் 'நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை நானே முன்னின்று நடத்தி வைப்பேன்' என்று கூறினார்.
மேலும் தனக்கு எதிர்காலத்தில் திரைப்படங்களை இயக்கும் எண்ணம் உள்ளது என்றும், அவ்வாறு இயக்குனர் ஆனால் 'தல அஜீத் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் படங்களை இயக்க விருப்பம்' என்றும் சிம்பு கூறியுள்ளார்
மேலும் வாலு' படத்தின் தாமதத்திற்கு முழுக்க முழுக்க நானே காரணம் என்றும், இந்த தாமதத்திற்கு தான் யார் மீது குற்றம் சொல்ல விரும்பவில்லை என்றும் சிம்பு தெரிவித்தார். என்னுடைய சோதனையான காலத்தில் எனக்கு பெரும் பலமாக இருந்த என்னுடைய ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி என சிம்பு அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments