'அச்சம் என்பது மடமையடா' சர்ப்பரைஸ் வீடியோ ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

  • IndiaGlitz, [Wednesday,January 13 2016]

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவின் இமேஜ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த டிரைலர் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதனை அடுத்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'தள்ளிப்போகாதே' சிங்கிள் பாடல் பொங்கல் திருநாளில் வெளிவரும் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் 'அச்சம் என்பது மடமையடா' படக்குழுவினர் 'தள்ளிப்போகாதே' சிங்கிள் குறித்த பத்திரிகையாளர் செய்தி ஒன்றை சற்று முன்னர் வெளியிட்டுள்ளனர். 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், 'தள்ளிப்போகாதே' சிங்கிள் பாடலின் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு பதிலாக இந்த படத்தின் சர்ப்பரைஸ் வீடியோ ஒன்று இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளனர்.

More News

உதயநிதியுடன் இணையும் பாப்புலர் ஹீரோ

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள 'கெத்து' திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் உதயநிதி அடுத்ததாக 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் ஏ.கே.அஹ்மத் இயக்கத்தில்...

'கெத்து' படத்தின் சிறப்பு காட்சியில் முன்னாள் துணை முதல்வர்

நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இணைந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி', இது கதிர்வேலன் காதல்' மற்றும் 'நண்பேண்டா' ஆகிய படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக சந்தானம்...

'தெறி'யாக வைக்கப்பட்டுள்ள விஜய் கேரக்டரின் பெயர்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வரும்...

'விஜய் 60' படத்தில் நடிப்பது குறித்து மியா ஜார்ஜ் கூறிய முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 60' படத்தில் 'அமரகாவியம்'...

மியா ஜார்ஜை அடுத்து 'விஜய் 60'-ல் இணையும் இன்னொரு நடிகை

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் விஜய்யின் 60வது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது....