'சிம்பு 48' படத்தின் அதிரடி அறிவிப்பு: ரசிகர்கள் குஷி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்புவின் 48வது படம் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களாக ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்த நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகராக மாறி உள்ளார். ஏற்கனவே அவர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பத்து தல’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படம் தான் சிம்புவின் அடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சிம்புவின் 48வது படம் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவலை எதிர்பார்த்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிம்பு நடித்து முடித்துள்ள ’மாநாடு’ மற்றும் ’மஹா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இதில் ‘மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், ’மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#VelsFilms Next with @SilambarasanTR_ !
— Vels Film International (@VelsFilmIntl) September 17, 2021
Announcement Coming Tomorrow !
Produced by Dr @IshariKGanesh's @VelsFilmIntl #STR48 pic.twitter.com/7eGIAHjvlm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments