'சிம்பு 48' படத்தின் அதிரடி அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

  • IndiaGlitz, [Friday,September 17 2021]

நடிகர் சிம்புவின் 48வது படம் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களாக ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்த நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகராக மாறி உள்ளார். ஏற்கனவே அவர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பத்து தல’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படம் தான் சிம்புவின் அடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சிம்புவின் 48வது படம் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவலை எதிர்பார்த்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிம்பு நடித்து முடித்துள்ள ’மாநாடு’ மற்றும் ’மஹா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இதில் ‘மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், ’மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யை பார்த்ததும் துள்ளிக்குதித்த வெளிநாட்டு விமர்சகர்!

வெளிநாட்டு விமர்சகர் ஒருவர் தமிழ் சினிமாவின் 10 சிறந்த திரைப்பட பின்னணி இசை குறித்த விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில் விஜய்யின் படம் வந்த போது மட்டும் அவர் துள்ளி குதித்த வீடியோ

தல அஜித்தின் 'வலிமை' டீசர் அப்டேட்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம்.

மகளுடன் நடிகை மீனா, வைரலாகும் புதிய போட்டோஷூட்!

நடிகை மீனா தனது மகளுடன் எடுத்த புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்: உறுதி செய்யப்பட்டதாக தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்

'நாய் சேகர்' டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு தமிழ் திரை உலகில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு 'நாய் சேகர்' என்ற டைட்டிலை வைக்க விருப்பம் தெரிவித்ததாக