தீபிகாவும் இல்லை, கீர்த்தி சுரேஷும் இல்லை.. சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை..!

  • IndiaGlitz, [Monday,January 29 2024]

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’சிம்பு 48’ திரைப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜய் படத்தில் நடித்த நடிகை தான் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’சிம்பு 48’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தயாராக வெளிநாடு சென்று திரும்பி இருக்கும் சிம்பு இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க இருப்பது பூஜா ஹெக்டே என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சமீபத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்தார் என்பதும் சில தெலுங்கு படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

எனது முதல் அனுபவம்.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட சூப்பர் வீடியோ..!

குகையில் கிடைத்த தியான அனுபவத்தை பகிர்ந்து உள்ளேன் என தனது முதல் குகை அனுபவத்தை ரம்யா பாண்டியன் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

யாருக்கும் இதுவரை வராத ஐடியா.. அல்போன்ஸ் புத்திரன் பதிவு.. ட்ரோல் செய்யாமல் வாழ்த்தும் நெட்டிசன்கள்..!

 கடந்த சில வாரங்களாகவே இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவுக்கு நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் செய்த பதிவுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருவது

'லால் சலாம்' விழாவில் ஐஸ்வர்யா சொன்ன சங்கி வார்த்தை: ரஜினிகாந்த் விளக்கம்..!

சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது அதில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'தனது அப்பாவை சங்கி என்று கூறுவது தனக்கு வருத்தமாக இருக்கிறது

69வது பிலிம்பேர் விருதுகள்: தலா 5 விருதுகளை அள்ளிய மூன்று திரைப்படங்கள்..!

 69 ஆவது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் தலா 5 விருதுகளை அள்ளி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? கணவருடன் வித்தியாசமான கேம் விளையாடிய அமலாபால்..

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அல்லது இரட்டை குழந்தைகளா? என்ற விளையாட்டை தனது