சிம்பு 46: டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதன்படி சற்று முன்னர் சிம்புவின் டுவிட்டர் தளத்தில் இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ’ஈஸ்வரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிம்பு பாம்பை கையில் வைத்திருக்கும் அட்டகாசமான போஸ்டரில் சிம்பு உண்மையாகவே உடம்பை குறைத்து ஸ்லிம்மாக இருப்பது சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்தாக உள்ளது.
அதுமட்டுமன்றி ’ஈஸ்வரனின் தாண்டவம் பொங்கல் திரையரங்குகளில்’ என பொங்கல் ரிலீஸ் என்பதையும் இந்த பர்ஸ்ட் லூக் போஸ்டர் ரசிகர்களுக்கு தகவலை தெரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிம்பு ஜோடியாக இந்த படத்தில் நிதி அகர்வால் நடிக்க இருப்பதையும் எஸ் தமன் இசையமைக்க இருப்பதும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
#Eeswaran #SilambarasanTR #ThaandavaPongal2021https://t.co/QYBZ7lSpWt@madhavmedia@dcompanyoffl@SusienthiranDir @MusicThaman @DOP_Tirru @AgerwalNidhhi @DSharfudden@DabbooRatnani pic.twitter.com/wCRqIFiQb0
— Silambarasan TR (@SilambarasanTR_) October 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com