சிம்பு-ஆதிக் படத்தில் யுவன் செய்த புதுமை இதுதான்...

  • IndiaGlitz, [Friday,June 24 2016]

சிம்பு நடிப்பில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள 'அன்பானவன் அசராவதவன் அடங்கதவன்' திரைப்படம் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் இந்த படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்தியினை பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தமிழ்த்திரையுலகில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு புதுமையை செய்யவுள்ளார். இந்த படத்திற்காக அவர் ஒன்பது பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளதாகவும் அனல் பறக்கும் பின்னணி இசையை அமைக்கவுள்ளதாகவும் இயக்குனர் ஆதிக் தெரிவித்துள்ளார்.
கடந்த 1950, 60களில் மட்டுமே அதிகளவிலான பாடல்களுடன் திரைப்படங்கள் வெளிவந்தது. அதன் பின்னர் அதிகளவிலான பாடல்களுடன் வெளிவரும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது