close
Choose your channels

இன்று மாலை சிம்பு படம் குறித்த முக்கிய அறிவிப்பு

Thursday, June 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அவர் நடித்த இன்னொரு படமான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளார். 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் கம்போஸிங் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் பாடல்களில் யுவன் ஒரு புதுமையை செய்துள்ளதாகவும் அது என்ன புதுமை என்பதை இன்று தெரிவிக்கவுள்ளதாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அது என்ன புதுமை என்பதை அறிய சிம்பு ரசிகர்களை போலவே நாமும் மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment