'வாலு' விநியோகிஸ்தர்களை உற்சாகப்படுத்திய செய்தி

  • IndiaGlitz, [Friday,August 14 2015]

பல்வேறு தடைகளை தாண்டி இன்று சிம்பு நடித்த 'வாலு' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தின் இல்லையில் இருக்கும் நிலையில் அவர்களுடைய உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ள காரணத்தால் மேலும் ஒருசில தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை வெளியிட ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த படம் நீண்டகாலம் வெளியாகாமல் தவித்ததற்கு பணம் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்த நேரத்தில் இந்த வரிவிலக்கு தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய சப்போர்ட் என்றே கூறப்படுகிறது. மேலும் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக ஆகிவருவதாகவும், சென்னையில் உள்ள ஒருசில தியேட்டர்களில் காலை 8 மணி காட்சி திரையிடவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மூன்று வருடங்கள் கழித்து வெளிவரும் சிம்பு திரைப்படம் என்பதால் இன்றைய முதல் காட்சியில் மேள, தாளம், ஆட்டம் பாட்டம் என ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை காசி தியேட்டரில் இன்று காலையில் இருந்தே சிம்பு ரசிகர்கள் தியேட்டர் முன் குவியத்தொடங்கிவிட்டனர். இந்த படத்தின் விமர்சனத்தை இன்னும் சில மணி நேரங்களில் பார்ப்போம்.