சிம்புவின் 'தாறுமாறு' பாடல் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Tuesday,July 05 2016]

சிம்புவின் 'இதுநம்ம ஆளு' சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' வெகுவிரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னும் ஒருசில நாட்களில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் அடுத்த படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான விக்ரம்பிரபு நடித்துள்ள 'வீரசிவாஜி' என்ற படத்திற்காக 'தாறுமாறு தக்காளிச்சோறு' என்ற பாடலை சமீபத்தில் சிம்பு பாடினார். டி.இமான் இசையமைத்த இந்த பாடல் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சிம்பு பாடிய முந்தைய பாடல்கள் போலவே இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம்பிரபு, ஷாமிலி, ஜான்விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் விரைவில் ரிலீஸ் செய்யவுள்ளது.

More News

உதயநிதியின் அடுத்த படத்தின் அப்டேட்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' திரைப்படம் 50 நாட்கள் திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடியதோடு, அவருடைய நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது...

நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத்...

மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

கடந்த ஆண்டு வெளியான 'ஓகே கண்மணி' வெற்றி படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8ஆம் தேதி...

சூர்யாவின் அடுத்த இயக்குனர் முத்தையா ஓர் பா.ரஞ்சித் ? ஞானவேல்ராஜா விளக்கம்

ஹரி இயக்கத்தில் சூர்யா தற்போது சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் மற்றும் அனுஷ்கா நாயகிகளாக நடித்து வரும்...

'கபாலி' பிரிமியர் காட்சி இடம், தேதி, நேரம் அறிவிப்பு. ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை...