விஷாலை கேள்விக்கணைகளால் தாக்கிய சிம்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருப்பதால் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்காக சரத்குமார் அணியில் சார்பில் நிற்கும் சிம்பு, இன்று ஆவேசமாக விஷால் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒற்றுமையாக இத்தனை ஆண்டுகாலம் இருந்த நடிகர் சங்கத்தை பிளவுபடுத்தியதே விஷால் என்றும் அவர்தான் இந்த பிரிவிற்கு முழு பொறுப்பு என்று கூறிய சிம்பு, எதனால் உங்களை நீங்களே பாண்டவர் அணி என்று அழைத்துக்கொள்கிறீர்கள், இதன்மூலம் ஒரு போரை நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிடும் கருணாஸ் எனது சகோதரரை போன்றவர். விஷால்தான் எங்களை பிரித்துவிட்டார். குடும்பம் போன்று இருந்த சங்கத்தை பிரித்த விஷாலுக்கு தலைமை பதவியை ஏற்கும் தகுதி இல்லை.
நட்சத்திர கிரிக்கெட் அணியை உருவாக்கியது நடிகர் அப்பாஸ்தான். ஆனால் அவரை வெளியேற்றிய விஷால், அணியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொண்டார். ராதாரவி உங்களை நாய் என்று அழைத்ததாக கூறினீர்கள். ஆனால் அவர் உங்களை நரி என்றுதான் அழைத்திருக்க வேண்டும். நீங்கள் நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு மட்டும்தான் கேப்டன். கேப்டன் விஜய்காந்த் போல நடந்து கொள்ள வேண்டாம்.
நடிகர் சங்கத்திற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். நடிகர் சங்கத்தின் சார்பில் சினிமா ஹால் கட்ட வேண்டாம் என கூறுகிறீர்கள். அப்படியென்றால் கிளப் அல்லது பப் கட்ட விரும்புகிறீர்களா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com