ஜூனியர் என்.டி.ஆர் இடத்தை பிடித்தார் சிம்பு

  • IndiaGlitz, [Monday,March 07 2016]

சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் மீண்டும் 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.


இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'டெம்பர்' என்ற படத்தின் ரீமேக் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்த சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பா வாங்கி வைத்திருந்ததாகவும், இந்த படத்தின் ரீமேக்கில் தான் சிம்பு நடிக்க விஜய்சந்தர் இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு இளம்பெண்ணை என்கவுண்டர் செய்ததால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கும் போலீஸ் அதிகாரியான இந்த படத்தின் கதையில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே சிம்பு 'குஸ்தி' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் இந்த படத்தை பூரிஜெகந்நாத் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குத்துச்சண்டை வீராங்கனையாகும் கீதாஞ்சலி நாயகி

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தின் நாயகி வாமிகா கபியின் நடிப்பு குறிப்பிட்டு பேசப்பட்டது...

உதயநிதி படத்தில் இணைந்த இருபெரும் இசையமைப்பாளர்கள்

கடந்த பொங்கல் தினத்தில் உதயநிதி நடித்த 'கெத்து' திரைப்படம் ரிலீஸாகிய நிலையில் அவருடைய அடுத்தபடமான 'மனிதன்'...

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் நாயகி

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ஒரே ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டால் அடுத்தது அவர்களுடை கனவு விஜய் அல்லது அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்....

ஸ்ருதிஹாசன் பாணிக்கு மாறும் த்ரிஷா

பழம்பெரும் நடிகைகளான கே.பி.சுந்தரம்பாள், பானுமதி, வரலட்சுமி உள்பட ஒருசில நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் சொந்தக்குரலில் டப்பிங் பேசுவது மட்டுமின்றி பாடல்களையும் அவர்களே பாடுவார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் ரஜினியுடன் இணைந்த சூர்யா

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த வரிசையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வரும் சினிமா வசனங்களின் மீமிஸ்கள் இளை&#