சிம்புவின் 'காதலர் தின' திட்டம்

  • IndiaGlitz, [Saturday,August 29 2015]

வாலு' பட வெற்றிக்கு பின்னர் உற்சாகத்துடன் தனது அடுத்தடுத்த படங்களில் சிம்பு கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. செல்வராகவன் இயக்கும் 'கான்' மற்றும் கவுதம் மேனன் இயக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படங்களில் நடித்து வரும் சிம்பு, விரைவில் அமீரின் 'மெர்சல்' படத்தலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வரும் 2016ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தான் கம்போஸ் செய்து வரும் 'லவ் ஆந்தம்' (Love Anthem) என்ற தனிப்பாடலையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

சர்வதேச புகழ் பெற்ற அகோன் (Akon) அவர்களுடன் இணைந்து சிம்பு பாடிய Love Anthem பாடல் குறித்த செய்திகள் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்து கொண்டிருந்தது. தற்போது அந்த பாடலுக்கு இறுதி வடிவம் கொடுத்து அந்த தனிப்பாடலை வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 14 'காதலர் தினத்தில் வெளியிட சிம்பு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Love Anthem பாடலில் ஒரு பெண்குரல் தேவைப்படுவதாகவும், அந்த பெண்குரலுக்காக உலகப்புகழ் பெற்ற பாடகி ஷகிராவிடம் ஏற்கனவே சிம்பு பேசி வைத்திருந்ததாகவும், ஆனால் இடையில் 'வாலு' பட பிரச்சனை ஏற்பட்டதால் அந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறும் சிம்பு தரப்பினர் தற்போது வாலு ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் விரைவில் ஷகிராவை சென்னைக்கு வரவழைத்து Love Anthem பாடலை முடிக்க சிம்பு தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக ஷகிரா பாடியா Waka Waka பாடல் உலகப்புகழ் பெற்றது என்பது அனைவரும் தெரிந்ததே.