சிம்புவின் 'இது நம்ம ஆளு' டிராக் லிஸ்ட் வெளியீடு

  • IndiaGlitz, [Tuesday,February 02 2016]

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசை ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. இந்த படத்தின் மூலம் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த படத்தின் டிராக் லிஸ்ட்டை தற்போது பார்ப்போம்,.

1. 'காத்தாக' என்று தொடங்கும் முதல் பாடலை சிம்பு எழுதி பாடியுள்ளார்.

2. கிங் காங்' என்று தொடங்கும் இந்த பாடலை மதன்கார்க்கி எழுதியுள்ளார். சிம்பு, ஸ்ருதிஹாசன், மற்றும் குழுவினர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

3. 'கண்ணே உன் காதல்' என்று தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா பாடியுள்ளார்.

4. 'மாமன் வெயிட்டிங்' என்ற அடுத்த பாடலை மதன்கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலை டி.ராஜேந்தர், சுசித்ரா பாடியுள்ளனர்.

5. ஒருதலை ராகம்' என்று தொடங்கும் இந்த பாடலை குறளரசன் எழுதியுள்ளார். இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார்.

6.'ஒரு தலை ராகம்' என்று தொடங்கும் மற்றொரு பாடலை குறளரசன் எழுத அதை ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியுள்ளார்.

நாளை வெளிவரவுள்ள இந்த படத்தின் பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கெத்து' என்பது கன்னட வார்த்தை. நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை அல்ல என்பதை காரணம் காட்டி தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை மறுக்கப்பட்டதை...

சிம்புவுடன் முதன்முதலாக இணைகிறார் ஸ்ருதிஹாசன்

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'இது நம்ம ஆளு' படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலை உள்ளது...

உலகின் எந்த விருதுக்கும் பரிந்துரைக்கலாம். 'விசாரணை' குறித்து வசந்தபாலன்

தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விசாரணை' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச விருதுகளை பெற்று சிறப்பு பெற்றது...

ஆர்யாவுக்கு இரண்டாவது தோல்வி

ஒருபுறம் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை வென்று சாதானை படைத்து வந்துள்ள நிலையில் ...

'கத்தி' - 'மிருதன்' படங்களுக்கு உள்ள அபூர்வ ஒற்றுமை

இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே...