close
Choose your channels

அஜீத்தின் கொள்கையை அப்படியே பின்பற்றும் சிம்பு?

Saturday, September 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

படத்தொடக்க விழா, புரமோஷன் விழா, ஆடியோ விழா என எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை என்ற கொள்கையில் இருக்கும் அஜீத், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் தனது கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தார். ஆனால் பின்னர் திடீரென இதே செப்டம்பர் 25ஆம் தேதிதான் அந்த சமூக வலைத்தளத்தில் இருந்து அஜீத் விலகுவதாக அறிவித்தார். அவர் விலகியபோதிலும் இன்னும் அந்த பக்கத்தில் ஃபாலோயர்கள் இணைந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜீத்தின் தீவிர ரசிகராக இருக்கும் நடிகர் சிம்பு, அவருடைய படங்களை பார்ப்பதோடு மட்டும் இருந்துவிடாமல் அவர் கடைபிடிக்கும் ஒருசில கொள்கைகளையும் கடைபிடித்து வருகிறார். அந்தவகையில் அஜீத்தை போலவே சிம்புவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யதார்த்தமாக சமூக வலைத்தளத்தில் சொல்லும் ஒருசில கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகிறது என்பதற்காக அஜீத் விலகிய அதே செப்டம்பர் மாதத்தில் அவருடைய ரசிகரான சிம்புவும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment