சிம்பு மீதான பீப் பாடல் வழக்கு திடீர் வாபஸ்

  • IndiaGlitz, [Monday,December 28 2015]

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிம்பு மீதும் அனிருத் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த பிரச்சனை நீதிமன்றம் வரையிலும் சென்று வரும் 4ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெறவுள்ளது. சிம்புவை பிடிக்க தனிப்படை அமைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் அனிருத் இன்னும் கனடாவில் இருந்து சென்னை திரும்பவில்லை. இந்நிலையில் சிம்பு மீது அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு அரசியல் கட்சியின் சார்பாக வெங்கடேஷ் என்பவர் சிம்பு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை இன்று வாபஸ் பெற்றுள்ளார். தனது கட்சியின் மேலிடம் கேட்டுக்கொண்டதற்காக இந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இருப்பினும் சிம்பு மீது பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

4 வருடத்திற்கு பின்னர் ரீ-எண்ட்ரி ஆகும் தனுஷ் பட இயக்குனர்

தனுஷ் நடித்த 'திருடா திருடி', 'சீடன்' உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் சுப்பிரமணிய சிவா...

2015-ல் தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்கள்

கடந்த வெள்ளியன்று வெளியான சூர்யாவின் 'பசங்க 2' மற்றும் ஜெயம் ரவியின் 'பூலோகம்' ஆகிய படங்களோடு சேர்த்து இந்த 2015ஆம் ஆண்டில் மொத்தம் 204 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்திய அளவில் அதிக படங்களை ரிலீஸ் செய்யும் தமிழ் சினிமா...

கேரளாவில் பிரபல தமிழ் நடிகை சென்ற கார் விபத்து

தலைநகரம், சபரி, பெரியார், நான் அவனில்லை, அறை எண் 305-ல் கடவுள், உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஜோதிர்மயி...

அஜீத்துக்கு ரஜினி தரும் பிறந்தநாள் பரிசு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது...

ஜெயம் ரவியுடன் முடியும் 2015, பரத்துடன் ஆரம்பிக்கும் 2016

2015ஆம் ஆண்டின் ஹீரோ யார்? என்றால் திரையுலகை சேர்ந்தவர்கள் யோசிக்காமல் சொல்லும் நடிகரின்...