முன்ஜாமீனுக்கு முயற்சி செய்கிறாரா சிம்பு?

  • IndiaGlitz, [Thursday,December 17 2015]

சமீபத்தில் இணையதளத்தில் வெளியான பீப் பாடலை பாடியவர் மற்றும் இசையமைத்தவர் என கூறப்படும் சிம்பு மற்றும் அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் மீது சென்னையிலும் மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நேற்று முன்தினம் மூன்று வழக்குகளும், நேற்று இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்டமாக இந்த பாடலை இணையதளத்தில் பதிவு செய்தவர் யார்? என்பதை கண்டுபிடித்து அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் சிம்பு வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிம்புதான் இந்த பாடலை பாடினாரா என்பதை உறுதிப்படுத்த அவருக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்கு சிம்பு முன்ஜாமீனுக்கு முயற்சி செய்வதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

More News

பிரமாண்ட இயக்குனர்களின் 2வது இன்னிங்ஸ் இன்று ஆரம்பம்

இன்றுடன் கார்த்திகை மாதம் முடிகிறது. நாளை முதல் மார்கழி பிறப்பதால் இன்று ஒருசில முக்கிய படங்களின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கவிழா...

தமிழ பாரம்பரியத்துக்கு எதிராக கையெழுத்திட்ட நாயகிகள்

தமிழர்களின் வீர விளையாட்டு என்று கூறப்படும் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது என்பது அனைவரும்...

இன்று ஒரே நாளில் நயன்தாராவின் 2 படங்களின் பூஜை

2015ஆம் ஆண்டு நயன்தாராவின் பொற்காலம் என்றே கூறலாம். அவர் நடித்த 'தனி ஒருவன்', 'மாயா', 'நானும் ரெளடிதான்' ...

'அஞ்சல' படத்திற்காக 'டீ' போடும் சினிமா பிரபலங்கள்

விமல், நந்திதா நடிப்பில் தங்கம் சரவணன் இயக்கியுள்ள 'அஞ்சல' படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ளது..

விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபு

கடந்த 1992ஆம் ஆண்டு ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு, பண்டரிபாய் நடித்த 'மன்னன்' திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்....