கமலும் நானும் ஒன்றா? சிம்பு

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது.

'இது நம்ம ஆளு' படப்பிடிப்பிற்கு சிம்பு தாமதமாக வரும்போது, அவரிடம் பாண்டியராஜ், 'ஏன் படப்பிடிப்பிற்கு லேட்டாக வருகிறீர்கள்' என கேட்டதாகவும் அதற்கு பதில் கூறிய சிம்பு, 'நான் சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடித்து கொண்டிருக்கின்றேன். சின்ன வயதில் இருந்து நடித்து வருவதால் நடிப்பே போர் அடிக்கின்றது' என்று கூறினாராம்.

அதற்கு பாண்டியராஜ், "கமல் சார் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சின்ன வயதில் இருந்து நடித்து வருகிறாரே? என்று சொன்னபோது, அதற்கு சிம்பு, 'தயவுசெய்து அவரோடு என்னை கம்பேர் செய்யாதீர்கள். நான் சாதாரண மனுஷன், அவர் கலைக்கடவுள்' என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆறு வயதில் இருந்து நடித்து கொண்டிருக்கும் கமல், அறுபதி வயதிலும் படப்பிடிப்பிற்கு தவறாமல் வரும் வழக்கத்தை உடையவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

More News

'புலி' குறித்து அமிதாப் கூறிய த்ரில் கருத்து

விஜய் நடித்த 'புலி' படம் பலவித பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,...

விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில்...

நடிகர் சங்க தேர்தல்: விஜயகாந்த் ஆதரவு யாருக்கு?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணிகளுக்கு தீவிரமாக ...

அஜீத்தின் 'வேதாளம்': டீசர், பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

தல' அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் ...

நெகட்டிவ் விமர்சனங்களை மீறி வெற்றி நடை போடுகிறது 'புலி'

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...