close
Choose your channels

சிம்புவின் 'AAA' கதை இதுதானா?

Friday, August 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 9 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பில் சிம்பு, ஸ்ரேயா நடித்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பில் சிம்புவின் 'மதுரை மைக்கேல்' கேரக்டர் படமாக்க திட்ட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை தற்போது கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு, தந்தை மற்றும் அவருடைய இரட்டை மகன்கள் கேரக்டரகளில் நடிப்பதாகவும், தந்தையின் வாழ்க்கை பாதையும் மகன்களின் வாழ்க்கை பாதையும் வெவ்வேறாக இருப்பதுதான் கதையின் முக்கிய அம்சம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இரட்டையர்களில் ஒருவர் நிழலுலக டான் என்றும், இந்த கேரக்டரின் படப்பிடிப்பு துபாயில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment