ஹாலிவுட்டையே ஆட்டிப்படைத்த சில்வஸ்டர் ஸ்டோலன்… வெற்றி பயணத்தின் ஆடியோ வடிவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
“ராக்கி“ என்ற ஹாலிவுட் சினிமாவை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. ஆனால் இந்த சினிமாவிற்கு பின்னால் ஒரு கதையாசிரியர், ஒரு நடிகர் கிட்டத்தட்ட 1,500 கம்பெனிகளிடம் கதைச் சொல்லி அசிங்கப்பட்ட வரலாறு தெரியுமா? ஆம் ராக்கி என்ற சினிமா கதையை எழுதி அதில் தானே நடிப்பதற்காக பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் சில்வர்ஸ்டன் ஸ்டோலன் கிட்டத்தட்ட 1,500 தயாரிப்பாளர்களைச் சந்தித்து கதைச் சொல்லி இருக்கிறார். ஆனால் அத்தனை தயாரிப்பு கம்பெனிகளும் ஒரே பதிலைத்தான் சொல்லி இருக்கின்றன.
உன்னுடைய கதை பிரமாதமாக இருக்கிறது. இப்போதைக்கு இதைப் படமாக எடுத்தால் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் நீதான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடிப்பதில் எதாவது நியாயம் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். காரணம் பிரபல குத்துச் சண்டை வீரர் முகமலி அலியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்ட அந்த கதையில் நடிப்பதற்கு சில்வஸ்டர் ஸ்டோலன் பொருத்தமானவரா என்பதுதான் பெரும்பலான தயாரிப்பு கம்பெனிகளின் கேள்வியாக இருந்தது.
சந்தேகமே இல்லாம் சில்வஸ்டர் ஸ்டோலன் ஒரு சிறந்த கதாசிரியன் என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அவருடைய முகம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கோணலாக இருக்கும். அதே நேரத்தில் திக்கு வாய் வேறு. எப்படி சரியான டயலாக் டெலிவரியை கொடுக்க முடியும். இந்தப் பதிலைக் கேட்டு சலித்துப்போன சில்வஸ்டர் ஸ்டோலன் ஒருபோதும் தன் முடிவை மட்டும் மாற்றிக் கொள்வதாய் இல்லை. இந்த உலகம் எப்போதும் சுயநலமாகத்தான் இருக்கும். இதில் வலிமை உள்ளவன் மட்டும்தான் பிழைக்க முடியும் என்ற கொள்கையில் மட்டும் விடாப்பிடியாக இருந்தவர் சில்வஸ்டர் ஸ்டோலன்.
இப்படி ஆரம்பித்த சில்வஸ்டர் ஸ்டோலன் பின்னாட்களில் கால் நூற்றாண்டு காலம் ஹாலிவுட் சினிமாவை ஆட்டிப் படைக்கிறார். “ராக்கி” என்ற திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை குவித்த பின்பு இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் பல்வேறு சினிமாக்கள் விருதுகளை வென்று குவிக்கின்றன. இத்தனை உயரத்திற்கும் ஒரே ஒரு காரணம்தான். “ராக்கி” படத்தின் கதாநாயகன் தான் மட்டுமே என்பதில் சில்வஸ்டர் ஸ்டோலன் உறுதியாக இருந்தார். அதோடு படிப்பே வராத தன்னுடைய இளம் பருவத்தில் அவர் எடுத்த ஒரு முடிவு என்னுடைய வாழ்க்கை சினிமாவில்தான் இருக்கிறது என்ற உறுதி.
இப்படி எத்தனையோ இன்னல்களையும், நெருக்கடிகளையும் தாண்டி சிகரத்தின் உச்சிக்கு சென்ற சில்வர் ஸ்டோலன் தொடர்ந்து தான் எடுத்த முடிவில் மட்டுமே உறுதியாக இருந்தார். அதோடு வெற்றியை ஒரு பொருட்டாகவும் அவர் மதித்தது இல்லை. இப்படியான ஒரு சிகரத்தின் வெற்றிக்கதையை Vaarta App ஆடியோவாக வெளியிட்டு இருக்கிறது. அந்த ஆடியோ வடிவம் தற்போது சமூக வலைத்தளத்தில் தனிக்கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout