கீழடி வெள்ளி நாணயம் இவ்வளவு பழமையானதா? வியப்பூட்டும் ஆராய்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Friday,July 30 2021]
சமீபத்தில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சின்னங்களுடன் கூடிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்ததைப் பற்றி தமிழ் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்கள் பலரும் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
தற்போது அந்த நாணயம் கிட்டத்தட்ட கி.பி.303 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று நாணயவியல் வல்லுநர் ஒருவர் தகவல் வெளியிட்டு உள்ளார். இதைத்தவிர இந்த வெள்ளி நாணயம் பண்டையகால தமிழர்கள் வடநாட்டு மௌரியர்களுடன் வாணிபத் தொடர்பில் இருந்தார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாணயவில் வல்லுநரான மணிகண்டன் வெளியிட்டுள்ள தனது குறிப்பில் கீழடியில் கிடைத்துள்ள வெள்ளி நாணயம் மௌரியர்கள் வெளியிட்ட மகத நாணயத்துடன் ஒத்துப்போகிறது என்று கூறியிருக்கிறார். இதனால் இந்த நாணயத்தை பாரத பண்பாடாக அணுகத் தேவையில்லை என்று சுட்டிக்காட்டிய அவர் நாணயத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கான அடையாளங்களும் இருப்பதாகத் தெரிவித்து உள்ளார்.
எனவே தனித்த தமிழர் பண்பாட்டை கொண்டு இருக்கும் இந்த நாணயம் வடநாட்டு மௌரி பேரரசுடன் தமிழர்கள் மேற்கொண்ட வணிகத்திற்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற தகவலைத் தெரிவித்துள்ளார்.