ஜூனியர் மீராபாய் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த சீனியர் மீராபாய்!
- IndiaGlitz, [Tuesday,July 27 2021]
ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு அவர்கள் மட்டுமே இந்தியாவுக்கு ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீராபாய் சானு நேற்று டெல்லி வந்த நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும், இன்று அவர் தனது சொந்த மாநிலமான மணிப்பூருக்கு சென்றபோது மணிப்பூர் முதல்வரே அவரை நேரில் சென்று வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீராபாய் போன்றே குட்டிப்பாப்பா ஒருவர் பளூதூக்கும் போட்டியில் கலந்து கொள்வது போல உள்ள வீடியோ ஒன்றை தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த வெள்ளி வீராங்கனை மீராபாய் சானு அவர்கள் ரொம்ப க்யூட்டாக இருக்கிறது, நான் இதை விரும்புகிறேன் என்று கூறிய ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சு அசலாக மீராபாய் போன்றே பளுதூக்கி அதன் பின் பொதுமக்களுக்கு வணக்கம் செலுத்தும் குட்டிப் பாப்பாவின் காட்சிகள் இந்த வீடியோவில் க்யூட்டாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
So cute. Just love this. https://t.co/IGBHIfDrEk
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 26, 2021