close
Choose your channels

'சிலுக்குவார்பட்டி சிங்கம்' டிரைலர் விமர்சனம்

Thursday, December 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் இந்த படத்தில் ஒரு போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் முழுக்க முழுக்க இந்த படம் ஒரு காமெடி படம் என்பது படத்தின் டிரைலரில் இருந்து தெரிகிறது. குறிப்பாக யோகிபாபுவின் காமெடி காட்சிகள் வழக்கம்போல் இந்த படத்திற்கும் பிளஸ் ஆக இருக்கும் என்பது உறுதி,

நாயகியாக ரெஜினா, கவர்ச்சிக்காக ஓவியா ஆகிய இருவரும் இந்த படத்தின் வெற்றிக்கு கண்டிப்பாக உதவுவார்கள். குறிப்பாக ஓவியாவின் குத்துப்பாட்டுக்கு தியேட்டர் அதிரும் என்பது உறுதி.

சைக்கிள் சங்கர் என்ற கேரக்டரில் ஆனந்த்ராஜ் வழக்கம்போல் காமெடி கலந்த வில்லனாக வருகிறார். லியோ ஜோன்ஸ் இசையமைத்த ஜாலியான பாடல்கள், மற்றும் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு உதவும்

மொத்தத்தில் இந்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' விஷ்ணு விஷாலுக்கு இன்னொரு 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படமாக அமையும். மேலும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்வது மற்றொரு பலம் ஆகும்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment