'சிலுக்குவார்பட்டி சிங்கம்' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Thursday,December 13 2018]

விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் இந்த படத்தில் ஒரு போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் முழுக்க முழுக்க இந்த படம் ஒரு காமெடி படம் என்பது படத்தின் டிரைலரில் இருந்து தெரிகிறது. குறிப்பாக யோகிபாபுவின் காமெடி காட்சிகள் வழக்கம்போல் இந்த படத்திற்கும் பிளஸ் ஆக இருக்கும் என்பது உறுதி,

நாயகியாக ரெஜினா, கவர்ச்சிக்காக ஓவியா ஆகிய இருவரும் இந்த படத்தின் வெற்றிக்கு கண்டிப்பாக உதவுவார்கள். குறிப்பாக ஓவியாவின் குத்துப்பாட்டுக்கு தியேட்டர் அதிரும் என்பது உறுதி.

சைக்கிள் சங்கர் என்ற கேரக்டரில் ஆனந்த்ராஜ் வழக்கம்போல் காமெடி கலந்த வில்லனாக வருகிறார். லியோ ஜோன்ஸ் இசையமைத்த ஜாலியான பாடல்கள், மற்றும் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு உதவும்

மொத்தத்தில் இந்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' விஷ்ணு விஷாலுக்கு இன்னொரு 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படமாக அமையும். மேலும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்வது மற்றொரு பலம் ஆகும்

 

More News

ஆர்ஜே பாலாஜியின் எல்.கே.ஜி படத்தில் விக்னேஷ்சிவன்

ஆர்ஜே பாலாஜி தற்போது 'எல்.கே.ஜி' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அரசியல் நையாண்டி படமாக அமையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய்சேதுபதியை சீதக்காதி கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை: பாலாஜி தரணீதரன்

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி

உணவு திருடிய சாப்பிட்ட நபருக்கு ஆதரவு கொடுத்த பிரபல நடிகை

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு வீடியோவில் தனியார் உணவு சப்ளை நிறுவன ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவினை பிரித்து சிறிதளவு சாப்பிட்டுவிட்டு

ஒரு இரவுக்கு ரூ.2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகையின் சாட்டையடி பதில்

சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. நடிகைகளும் இந்த விஷயத்தை தைரியமாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்

2வது டெஸ்ட்டில் ரோஹித், அஸ்வின் நீக்கம்! இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி கடந்த 6ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.