சில்லுன்னு ஒரு காதல்' குட்டி பெண்ணா இவர்? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,April 15 2023]
சூர்யா ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்திருந்த ஸ்ரேயா சர்மா தற்போது ஒரு வழக்கறிஞராக இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் சூர்யா ஜோதிகா மகளாக நடித்த ஸ்ரேயா சர்மாவை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ’ரஸ்னாவை அப்படியே குடிப்பேன்’ என்ற விளம்பர படத்தில் நடித்த ஸ்ரேயா சர்மா அதன் பிறகு ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.
அது மட்டுமின்றி ஏராளமான விளம்பர படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டுவிட்டு மேல் படிப்பதற்காக சென்றுவிட்டார். அவர் வழக்கறிஞர் படிப்பு படித்த நிலையில் தற்போது அவர் பிரபல வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்ரேயா விலங்குகள் நல அமைப்புகள் உடன் தொடர்பில் இருக்கிறார் என்பதும் செல்ல பிராணிகள் மீது மிகுந்த பாசமும் வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 26 வயதாகும் ஸ்ரேயா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில் பார்த்த குட்டி பெண்ணா இவர்? என்று ரசிகர்கள் வியப்புடன் அவரை பார்த்து வருகின்றனர்.