நீங்க உண்மையிலேயே ராணி தான்: 'சில்லுன்னு ஒரு காதல்' குட்டிப்பாப்பாவின் க்யூட் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்று ’சில்லுனு ஒரு காதல்’ என்பதும் இந்த வெற்றி படத்தில் சூர்யா-ஜோதிகா தம்பதிகளுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மா என்பதும் தெரிந்தது. இவர் அதன் பின்னர் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், தெலுங்கில் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ரேயா சர்மா திடீரென நடிப்பை கைவிட்டு விட்டு உயர் படிப்பு படிக்க சென்று விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா சர்மா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவருடைய பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் ராணி போன்று கிரீடம் வைத்து சிரித்த முகத்துடன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவருடைய புகைப்படத்திற்கு கமெண்ட் செய்த பலரும் ’நீங்கள் உண்மையிலேயே ராணி போல தான் இருக்கின்றீர்கள்’ பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவில் அவர் கேஷனாக ’தினமும் அழுவதற்கு 1000 காரணங்கள் இருக்கலாம், ஆனால் நான் சிரிக்க வைக்க ஒரே வழி ஒரு நண்பரை கேமராவை இயக்கச் சொல்வது’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments