சாய்பல்லவியை தேவதையாக வர்ணித்த தமிழ் திரைப்பட இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2014ஆம் ஆண்டு ‘பூவரசம் பீப்பி’ என்ற திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம் சமீபத்தில் ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி கொண்டாடினர்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய்பல்லவி சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயக்குனர் ஹலிதாவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்த பின்னர் நானும் எனது பெற்றோரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தோம். உண்மையிலேயே உங்களை நினைத்து நாங்கள் பெருமைபப்டுகிறோம். நல்ல இதமான உணர்வுகளை வழங்கிய உங்களுக்கு நன்றி. இன்னும் இதே போல் அதிக படங்களை எடுங்கள்’' என்று கூறியுள்ளார்
சாய்பல்லவியின் இந்த பாராட்டு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்த இயக்குனர்ஹலிதா ஷமீம், ’இந்த ஊரடங்கு நேரத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால் சாய்பல்லவி என்ற தேவதையிடம் இருந்து வந்த இந்த மெசேஜ் எனது மன அழுத்தத்தை போக்கிவிட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Lockdown had me depressed for most of the times.
— Halitha (@halithashameem) April 23, 2020
And then,
The angel messaged me! ?? pic.twitter.com/grz5YKlRXU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments