திடீரென வைரலாகும் சில்க் ஸ்மிதா வீடியோ: என்ன தான் இருக்குது பாருங்களேன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் கவர்ச்சிக்கன்னி என்றால் அது சில்க் ஸ்மிதா தான் என்பதும் அவருக்கு ஈடு இணையாக இன்னும் ஒரு கவர்ச்சி நடிகை இந்திய திரை உலகில் பிறக்கவில்லை என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த 80 மற்றும் 90களில் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் ஐட்டம் டான்ஸ் ஆடினார் என்பதும், அவரது பாடலுக்கு திரையரங்குகளில் எழுந்து ஆடாத ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் என்பதும் அவரது பாடலுக்காகவே பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியது.
இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு திடீரென தூக்கில் தொங்கி சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்க் ஸ்மிதா மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் அவரது டான்ஸ் ரசிகர்களுக்கு விருந்தாகத்தான் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக திடீரென டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில்க்ஸ்மிதா பாடும் பாடல் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. ’சுராங்கனி சுராங்கனி’ என்ற பாடலை சில்க் ஸ்மிதா நடனம் ஆடிக்கொண்டே மேடையில் பாடும் இந்த வீடியோவில், சில்க்ஸ்மிதாவுடன் மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
This energetic performance .. ????#SilkSmitha ?? https://t.co/wKUBnZWMOg
— Sathiya Sothanai (@Timepassna) January 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com