close
Choose your channels

சில்க் ஸ்மிதாவை 'மார்க் ஆண்டனி' புரமோஷனில் அறிமுகம் செய்த படக்குழு.. வைரல் வீடியோ..!

Sunday, September 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் மற்றும் எஸ்ஜே. சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சில்க் ஸ்மிதாவை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். சில்க் ஸ்மிதாவாக நடித்த பெண்ணை அறிமுகம் செய்த விஷால், ’இவரது பெயர் விஷ்ணு பிரியா, இன்ஸ்டாகிராமில் பிரபலம், குறிப்பாக இன்ஸ்டாவில் சில்க் போலவே நடனமாடி இருப்பார் என்றும் தெரிவித்தார்.

இயக்குனர் ஆதிக் விச்சந்திரன் தன்னிடம் ‘இன்ஸ்டாவில் அந்த பெண்ணை பார்த்தவுடன் சில்க் ஸ்மிதா என்ற கேரக்டரை இந்த படத்தில் கொண்டு வரலாம் என்றும் அவரை நடிக்க வைத்து கொஞ்சம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்தால் உண்மையான சில்க் போலவே அவர் இருப்பார் என்றும் தெரிவித்த போது நான் சூப்பர், அதேபோல் செய்யுங்கள் என்று கூறினேன், அதன் பிறகு தான் அவர் அந்த படத்திற்கு வந்தார் என்றும் விஷால் தெரிவித்தார்.

விஷ்ணு பிரியா இதுகுறித்து கூறிய போது, ‘இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு தனது நன்றி, விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் எனக்கு ஊக்கம் அளித்தார்கள் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் முதலில் சில்க் ஸ்மிதாவாக நடனம் ஆடினேன், அதன் பிறகு நானே அதை மறந்து விட்டேன், ஆனால் இயக்குனர் அதை பார்த்து எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார், அவருக்கு எனது நன்றி என்று கூறியிருந்தார். இந்த உரையாடல் குறித்த வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment