மீண்டும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம்: காந்த கண்ணழகி கேரக்டரில் யார்?

  • IndiaGlitz, [Saturday,October 03 2020]

கடந்த 1979ஆம் ஆண்டு சிவகுமார் நடித்த ’வண்டிச்சக்கரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான சில்க் ஸ்மிதா அதன் பின்னர் கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கடந்த 80கள் மற்றும் 90களில் சில்க் ஸ்மிதா நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில்க் ஸ்மிதா கடந்த 1996ஆம் ஆண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ என்ற படம் பாலிவுட்டில் உருவானது என்பதும் இந்த படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட பல மொழிகளில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது. சித்ரா லட்சுமணன் மற்றும் முரளி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை மணிகண்டன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சந்தானம் நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

’அவள் அப்படித்தான்’ என்ற டைட்டிலில் உருவாக இருக்கும் இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவின் கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகையை தேடி வருவதாகவும் சில்க் ஸ்மிதா போன்றே காந்த கண்கள் உள்ள நடிகையை விரைவில் தேர்வு செய்வோம் என்றும் இயக்குனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என தெரிகிறது.
 

More News

பிங்க் நிற உடை, குட்டி தேவதையுடன் ஆல்யா: வைரலாகும் முதல் போட்டோஷூட்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஆல்யா மானசா

அக்கரையில் இருப்போரின் ஆதரவும் இபிஎஸ்க்கே… வேட்பாளர் தகுதியும் இவருக்கே… குதூகலிக்கும் தொண்டர்கள்!!!

தமிழகத்தில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் குறித்த சர்ச்சை சில தினங்களாக கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

169 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட கழிவறை… எதுக்கு இத்தனை காஸ்ட்லி தெரியுமா???

சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்களை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பி வைத்திருக்கிறது.

மதுக்கடைக்கு பதிலாக இனிப்பு கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…. அலட்சியத்தால் நடந்த சுவாரசியம்!!!

தேசப் பிதா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா இந்தியாவில் விமர்சியாகக் கொண்டாடப் படுகிறது

விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' படத்தின் பலம், பலவீனம் என்ன? இயக்குனர் சேரன் 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் விருமாண்டி இயக்கிய 'க/பெ ரணசிங்கம்'திரைப்படம் நேற்று ஓடிடியில் ரிலீஸான நிலையில்