சில்க் ஸ்மிதா கேரக்டரில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' நாயகி..
Send us your feedback to audioarticles@vaarta.com
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த சில திரைப்படங்கள் ஏற்கனவே வந்துள்ள நிலையில் தற்போது ’சில்க் ஸ்மிதா’ என்ற பெயரிலேயே இன்னொரு திரைப்படம் உருவாகி வருகிறது.
பிரபல கிளாமர் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடிகை வித்யா பாலன் நடித்திருந்த நிலையில் இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதனை அடுத்து இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மலையாளத்தில் ’கிளைமாக்ஸ்’ என்ற பெயரில் ஒரு படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானது என்பதும் சில்க் ஸ்மிதா கேரக்டரில் சனா கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ’சில்க் ஸ்மிதா’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயராம் என்பவர் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கேரக்டரில் சந்திரிகா ரவி நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தில் பேய் கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout