சிம்புவின் 'AAA' ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது வலுவான ஆதரவை கொடுத்த நடிகர் சிம்பு, இந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்து படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணியை விரைவில் தொடங்கவுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் மூன்று கேரக்டர்களில் இரண்டு கேரக்டர்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவது கேரக்டரான ஸ்மார்ட் இளைஞரின் கேரக்டர் படப்பிடிப்பு தற்போது நடைபெறவுள்ளது. இந்த கேரக்டருக்காக தற்போது உடல் எடையை குறைப்பதில் சிம்பு மும்முரமாக உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் தமிழ்ப்புத்தாண்டு தினம், அல்லது ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் வெளிவரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், சந்தானம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் இந்த படத்தை பெரும்பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.