சிம்பு ரசிகர்களுக்கு இன்று 'தரை மாஸ்' கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Monday,August 01 2016]

சிம்பு நடிப்பில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது
இந்நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சிம்புவின் இன்னொரு கேரக்டனான 'மதுரை மைக்கேல்' கேரக்டர் குறித்த காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இதனை முன்னிட்டு இன்று 'மதுரை மைக்கேல்' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தரை மாஸ் ஆக இருக்கும், சிம்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒன்பது பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளார். மைக்கேல் ராயப்பன் அவர்களின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த் மற்றும் படத்தொகுப்பாளராக ரூபன் பணியாற்றி வருகின்றனர்.

More News

இதுவரை 'கபாலி' செய்த வசூல் நிலவரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக 5000க்கும்...

'தெறி'யுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

அஜித்துடன் ஆரம்பம், ஜீவாவுடன் முடிவு. காஜல் அகர்வால்

தல அஜித் நடிக்கவுள 'தல 57' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் ஆரம்பமாகவுள்ளது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும்...

வெங்கட்பிரபுவுடன் இணைந்த 'கபாலி' நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக பாசிட்டிவ் விமர்சனம் பெற்றவர் தன்ஷிகா. அதிரடி...

சிம்புவின் 'AAA' படத்தில் மேலும் ஒரு பழம்பெரும் நடிகர்

சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின்...