பீப் பாடலை இயற்றியது ஏன்? போலீஸாரிடம் சிம்பு விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த டிசம்பர் மாதம் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவர் மீதும் கோவை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக ஏற்கனவே அனிருத் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்ட நிலையில் நேற்று சிம்பு கோவை போலீசார் முன் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இந்த விசாரணையில் காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு சிம்பு கூறிய பதில் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. சிம்புவிடம் கோவை போலீசார் சுமார் 20 நிமிடங்கள் விசாரணை செய்ததாகவும், அவர்கள் கேட்ட 35 கேள்விகளுக்கும் சிம்பு பொறுமையாக பதில் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
காதல் தோல்வி ஏற்பட்டதால்தான் இந்த பாடலை தான் எழுதி இசையமைத்து பாடியதாகவும், இந்த பாடல் முழுக்க முழுக்க தனது சொந்த இசைக்கருவியின் மூலம்தான் கம்போஸ் செய்யப்பட்டதாகவும், இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.
மேலும் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த இந்த பாடல் இணையத்தில் எப்படி லீக் ஆனது என்று தெரியாது என்றும், இந்த விஷயத்தில் தான் ஒரு அப்பாவி என்றும் இணையத்தில் இந்த பாடல் லீக் ஆனதற்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments