அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு கிடைத்த இனிப்பான செய்தி

  • IndiaGlitz, [Saturday,November 12 2016]

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நேற்று வெளியாகி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களளயும் கவர்ந்துள்ளது. 'விண்ணை தாண்டி வருவாயோ' டீம் மீண்டும் இணைந்துள்ளதால் ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளது என்பது வெளிவந்து கொண்டிருக்கும் விமர்சனங்களில் இருந்து தெரிய வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் கவுதம் மேனனுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது என்பதுதான் அந்த இனிமையான செய்தி. இந்த செய்தி ஒரு தயாரிப்பாளராக அவரை உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்து சென்றிருக்கும்.
தமிழக அரசின் வரிவிலக்கு காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாசிட்டிவ் ரிசல்ட், மற்றும் வரிவிலக்கு ஆகியவை இந்த படத்தின் லாபத்தை பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'அச்சம் என்பது மடமையடா' முதல் நாள் வசூலில் சாதனை

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் பழம்பெரும் நிறுவனமான ஏவிஎம் திரைப்பட நிறுவனம் ஒரு படத்திற்கு பூஜை போட்ட அன்றே ரிலீஸ் தேதியையும் அறிவித்து அதன்படி சரியாக திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வார்கள்.

சபர்ணாவின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

பிரபல தொலைக்காட்சி நடிகை சபர்ணா சற்றுமுன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி செய்தியை பார்த்தோம். இந்த செய்தியை கேட்டு சக தொலைக்காட்சி சீரியல் நட்சத்திரங்கள் மட்டுமின்றி திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கோவையை சொந்த ஊராக கொண்ட நடிகை சபர்ணா சென்னைக்கு வந்த புதிதில் போரூரில் தங்கியிருந்தார். பின்னர் இவர் சமீபத்தில்

சபர்ணாவின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

புதிய ரூபாய் நோட்டு தட்டுப்பாடு : திரைப்படங்கள் நிறுத்தி வைப்பு

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு...