'AAA' படக்குழுவினர்களுக்கு சிம்பு கொடுத்த 'கபாலி' பரிசு

  • IndiaGlitz, [Tuesday,July 19 2016]

தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' பட டிக்கெட் கிடைக்குமா? என்ற கேள்விதான் எழுந்து வருகிறது. திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிய ஒருசில நிமிடங்களில் டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிடுவதால் இந்த படத்தின் டிக்கெட்டுக்காக எதையும் செய்ய ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரை நட்சத்திரங்களும் இந்த படத்தின் டிக்கெட்டுக்களை பெற பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வரும் சிம்பு, படக்குழுவினர்கள் அனைவருக்கும் 'கபாலி' படத்தின் டிக்கெட்டுக்களை தனது அன்பு பரிசாக வழங்கி அனைவரையும் அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி படக்குழுவினர்களுடன் சிம்புவும் 'கபாலி' படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் சிம்புவுக்கு நன்றி கூறியதோடு 'மகிழ்ச்சி' என்றும் 'சிறப்பு' என்றும் பதிவு செய்துள்ளார்.