நடிகர் சிம்புவின் புது மைல்கல் சாதனை… உற்சாகத்தில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்புவிற்கு என்று எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருவது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் உடல்எடையை திடீரென குறைந்து கல்லூரி மாணவரைப் போல மீண்டும் தமிழ் சினிமாவில் ஜொலிக்கத் துவங்கியிருக்கும் இவருக்கு ரசிகர்களிடையே சமீபத்தில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சிம்பு புது சாதனையைப் படைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு, நடிப்பைத் தவிர பாடல் பாடுவது, இயக்கம், இசை, நடனம், பின்னணி பாடல் வரிகள் எழுதுவது என பன்முகத் திறமையுடன் காணப்படுகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இவருக்குக் கடந்த சில வருடங்களாகத் திடீரென வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டன. இதையடுத்து தன்னுடைய உடல்எடையைப் பாதியளவிற்குக் குறைத்துத் தற்போது வேறலெவல் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ரிலீசான “ஈஸ்வரன்” திரைப்படத்தில் இவருடைய தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் கடும் வியப்பை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய “மாநாடு“ திரைப்படம் நடிகர் சிம்புவிற்கு அதிக வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தற்போது “வெந்துதணிந்தது காடு“, “பத்து தல“, “கொரோனா குமார்“ என அடுக்கடுக்காகத் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய டிரான்ஸ்பர்மேஷன் குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும் அதேநேரத்தில் புது உற்சாகத்தையும் தந்திருக்கிறது. இதனால் பல இளைஞர்கள் நடிகர் சிம்புவை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது உடற்பயிற்சியில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
இதையடுத்து நடிகர் சிம்புவை இன்ஸ்டாவில் பின்தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 6 மில்லியனைத் தொட்டிருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவரும் சிம்பு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமாக ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அதிக ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் நடிகர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. இது சிம்பு ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com