நாம யாருங்கிறதை காட்டுவோம். சிம்புவின் அதிரடி திட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி விடிய விடிய தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சிம்பு
சமீபத்தில் தனது வீட்டின் முன்பு 10 நிமிடம் மெளனப்போராட்டம் நடத்தியவர். இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் ஒரு அதிரடி போராட்ட திட்டத்தை சிம்பு அறிவித்துள்ளார்.
இன்று இரவு 8 மணிக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஒரு இடத்தை தேர்வு செய்து போராட்டம் நடத்த தயாராகுங்கள். தயவுசெய்து மருத்துவமனை, மெடிக்கல் ஷாப் போன்றவற்றின் அருகில் போராட்டம் நடத்த வேண்டாம். மருத்துவமனை ஊழியர்கள் தவிர நாளை அனைவரும் கூடி நாம் யார் என்பதை காட்டுவோம்
நமது போராட்டத்திற்கு பல வகைகளில் பிரச்சனை கொடுப்பார்கள். ஆனால் நாம் இந்த விஷயத்தை விடப்போவதில்லை. நாம் அனைவரும் ரோட்டில் உட்காருகிறோம். இந்த பிரச்சனை தீரும் வரை எழுந்திருக்க போவதில்லை. என்று சிம்பு கூறியுள்ளார்.
#JusticeforJallikattu Spread the message pic.twitter.com/aw3FVGdMJP
— STR (@iam_str) January 17, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments