சிம்புவின் புதிய பட டைட்டில் இதுதான்

  • IndiaGlitz, [Sunday,May 01 2016]

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மூன்று வேடங்களில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.
சிம்பு-ஆதிக் இணையும் இந்த புதிய படத்திற்கு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிலிம்ஸ் நியூஸ் ஆனந்தன் படத்திறப்பு விழாவில் கமல்-விஷால்

தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ என்ற புகழ்பெற்ற பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே....

அஜித்' என்ற ஒற்றைச்சொல் மந்திரம்

தல' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்தை நடிகர் என்ற கோணத்தில் பார்ப்பதை விட நல்ல மனிதர் என்ற கோணத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நெருங்கியிருக்கும் ஒருவர், எந்தவித பந்தாவும் இல்லாமல் பெரும்பாலான சர்ச்சைகளுக்கு தனது மெளனத்தை மட்டுமே பதிலாக அளிப்பவர்தான் அஜித்....

பூனம் பாஜ்வாவுக்கு திருமணம் நடந்தது உண்மையா? அவரே விளக்குகிறார்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பூனம் பாஜ்வாவுக்கும் பிரபல தெலுங்கு இயக்குனர் சுனில்ரெட்டிக்கும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ரகசிய திருமணம் நடந்ததாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியது....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி'- டீசர் விமர்சனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் தனக்கே உரித்தான் ஸ்டைலில் நடந்து வரும் காட்சியுடன் டீசர் தொடங்குகிறது....

'கபாலி' டீசரை எதிர்நோக்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியாகும்...