நான் ஓடி ஒளியற ஆள் இல்லை - 'பீப் பாடல்' நடவடிக்கை குறித்து சிம்பு

  • IndiaGlitz, [Wednesday,December 16 2015]

சிம்பு-அனிருத் இணைந்து தயாரித்த 'பீப் பாடல்' குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில் இந்த பாடலை தான் கம்போஸ் செய்யவில்லை என அனிருத் கூறியதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சிம்பு இதுகுறித்து நேற்று தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தாம் சட்டப்படி எதிர்கொள்ள தயார் என்றும் தான் ஓடி ஒளியற ஆள் இல்லை என்றும் தனக்கு கடவுள் மீது முழு நம்பிக்கை இருப்பதால், கடவுள் தன்னை காப்பாற்றுவார் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய உண்மை மற்றும் நேர்மை தன்னை நிச்சயம் காப்பாற்றும் என்ற தன்னம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சிம்பு கூறியுள்ளார்.

சிம்புவின் இந்த பதிவை அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரீடுவீட் செய்தும், லைக் செய்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த பாடல் தனது தனிப்பட்ட பாடல் என்றும், தன்னுடைய மொபைல் போனில் இருந்து யாரோ திருடி இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவு செய்துவிட்டனர் என்றும் சிம்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று முதல் 'எந்திரன் 2' படப்பிடிப்பு ஆரம்பம். ஷங்கரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

பாகுபலி' ரிலீசுக்கு முன்புவரை தென்னிந்தியாவின் அதிக வசூல் பெற்ற படம் என்ற புகழை பெற்றிருந்த 'எந்திரன்'...

இந்த வெள்ளம் நமக்கு கற்று கொடுத்த பாடம் என்ன? இளையராஜா

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வெள்ள நிவாரணம்...

கமல் மகளுக்கு கிடைத்த மாபெரும் விருது

உலக நாயகன் கமல்ஹாசன் தேசிய விருதுகள், பத்ம விருதுகள் மற்றும் பல விருதுகள் வாங்கி குவித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே...

பீப் பாடலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும். ஒய்.ஜி.மகேந்திரா

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்த சர்ச்சை நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் அமைப்புகள்...

விக்ரம் படத்தை இயக்கும் விஷால் இயக்குனர்

விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', சமர்', மற்றும் 'நான் மகான் அல்ல' ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கவுள்ள அடுத்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...