நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் இந்தியாவின் முதல் திரைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,May 01 2018]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த 'சில சமயங்களில்' திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை தற்போது பார்ப்போம்

விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்களை கொடுக்கும் பிரியதர்ஷன், தனது பாணியில் நல்ல கலைப்படங்களை செதுக்குவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. 

இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரைப்பயண மகுடத்தில் இன்னொரு வைரக்கல் சேர்ந்திருக்கிறது. ஆம், அவர் இயக்கிய 'சில சமயங்களில்' இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. 

டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக தன்னை நிரூபித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், உலகம் முழுக்க சென்று சேரும் விதமான கதையை கொண்டிருப்பதால் இந்த பெரிய நிறுவனத்தை ஈர்த்திருக்கிறது. 

டிராமா வகையை சேர்ந்த இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் மற்றும் வருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் விஜயின் திங்க் பிக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார் டாக்டர் கணேஷ். இந்த படம் வரும் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
 

More News

விஷாலின் 'இரும்புத்திரை' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த இரும்புத்திரை' திரைப்படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதிலும், கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

அஜித் மீது பெரிய மரியாதை ஏற்பட இதுதான் காரணம்: இயக்குனர் சுசீந்திரன்

அஜித் பிறருக்கு செய்த உதவிகள் அளவற்றதாக இருந்தாலும் அவை பெரும்பாலும் வெளியில் தெரிவது இல்லை. உதவி பெற்றவரே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கூறும்போதுதான்

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினாரா தமிழக அமைச்சர்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அரசியல் வாரீசாக அஜித் வருவார் என வதந்திகள் பரவியது அனைவரும் அறிந்ததே

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்

தல அஜித்தின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் அஜித்துக்கு பிறந்து வாழ்த்துக்கள் குவிந்து வருவதால் #HBDThalaAJITH என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் உள்ளது.

மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு' படத்தின் அசத்தல் வசூல் விபரங்கள்

மகேஷ்பாபு நடித்த 'பாரத் அனே நேனு' திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்