close
Choose your channels

வைரமுத்து விவகாரம்: சின்மயிக்கு பாராட்டு தெரிவித்த பிரபல நடிகர்

Wednesday, October 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக நடிகைகள் சமீபகாலமாக கூறி வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தாவும், கோலிவுட், டோலிவுட்டில் ஸ்ரீரெட்டியும் ஆரம்பித்த வைத்த புயல் தற்போது வைரமுத்து உள்பட ஒருசிலர் மீதும் பாய்ந்துள்ளது. வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு பெண் கூறிய தகவலை பெண் பத்திரிகையாளர் ஒருவரும் பாடகி சின்மயியும் தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரமுத்து மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றாலும் அவர் இதுவரை மெளனமாக இருப்பது அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகர் சித்தார்த் இதுகுறித்து கூறியபோது, '“கவிஞர் வைரமுத்து மீது ஒருசில பெண்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஒருவர் மீது குற்றம் சுமத்தி பேசும்போது அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். சின்மயி போன்ற பிரபலங்கள் இந்த விஷயயத்தில் பின் விளைவுகளை குறித்து கவலைப்படாமல் குற்றம் சாட்டுபவர்களுக்கு ஆதரவாக இருப்பது பாராட்டுதலுக்குரியது. இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment