டுவிட்டரில் ரஜினியை கிண்டலடித்தாரா சித்தார்த்?
- IndiaGlitz, [Thursday,May 31 2018]
நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னர் பேட்டியளித்த போது, 'தூத்துகுடியில் சமூக விரோதிகள் ஊடுருவியதே போராட்டம் கலவரமாக மாற காரணம் என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த், தனது டுவிட்டரில், 'இத்தனை நாட்களாக தூத்துக்குடியை மாசுபடுத்தியது சமூக விரோதிகள் என அடுத்து கூறுவார்கள்' என்று கூறியுள்ளார்.
சித்தார்த்தின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்களிடையே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியை மாசுபடுத்தியது ஸ்டெர்லைட் ஆலை என்ற சமூக விரோதிதானே! இதில் சந்தேகமே இல்லை என அனைவரும் கூறி வரும் நிலையில் சித்தார்த்தின் இந்த டுவீட் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான டுவிட்டாக கருதப்படுகிறது
ரஜினியை விமர்சனம் செய்வதாக நினைத்து கொண்டு அவர் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக டுவீட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினியை விமர்சனம் செய்தால்தான் விளம்பரம் கிடைக்கும் என செயல்பட்டு கொண்டிருக்கும் பட்டியலில் சித்தார்த்தும் சேர்ந்து விட்டாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Next they will tell us anti social elements polluted #Thoothukudi all these years.
— Siddharth (@Actor_Siddharth) May 30, 2018