ஹெச்.ராஜாவை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் நேற்று நீதிமன்றம் குறித்தும் காவல்துறை குறித்தும் சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தையை கூறி விமர்சனம் செய்தார். இந்த விமர்சனத்திற்கு அனைத்து தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த், ஹெச்.ராஜாவை தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அப்பாவி பொதுமக்கள் போராடும்போது சுட்டுக்கொல்லும் காவல்துறை, நீதிமன்றம், காவல்துறை குறித்து ஹெ.ராஜா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது கண்டனத்துக்குரியது' என்று கூறியுள்ளார்.
'பாஸிச பாஜக ஒழிக' என ஒரு அரசியல் கட்சியை விமர்சனம் செய்த சோபியாவை உடனே கைது செய்த காவல்துறை, ஒட்டுமொத்த காவல்துறை, நீதித்துறையை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தவரை கைது செய்யாதது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
If #TNPolice which shot and killed protestors simply watches this rabid idiot @HRajaBJP as he abuses the High Court, police, minorities and most ironically Hinduism, then it shows what they stand for! This #HindutvaTerrorist should be shown the law and the constitution. #Shame https://t.co/vhYh7Cft7U
— Siddharth (@Actor_Siddharth) September 16, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout