இந்த தேசம் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கியுள்ளது: பிரபல நடிகரின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாகவே மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் ரஃபேல்ஸ் போர் விமான ஒப்பந்தம் குறித்த சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த விஷயத்தில் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் பாஜகவின் அதிகாரபூர்வ சமூக இணையதளத்தில் இதுகுறித்து குறிப்பிடும்போது, 'ராகுல்காந்தி ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்கள் குறித்து கட்டுக்கதைகளை கூறி வருகிறார். அகஸ்டா மற்றும் போஃபோர்ஸ் பீரங்கி ஒப்பந்தங்கள் மூலம் தனது குடும்பம் அடைந்த பலனை போல் தன்னால் அடைய முடியவில்லை என்ற விரக்தி ராகுலுக்கு இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து கூறிய பிரபல நடிகர் சித்தார்த், 'இந்த தேசம் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கியுள்ளது. வேறு ஏதாவது நல்லது நடக்குமா? ஏனெனில் இந்த தேசம் சிறப்பானதை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது' என்று கூறியுள்ளார். மேலும் இந்த இரண்டு கட்சிகளையும் நேரடியாக குறிப்பிடாமல் இந்தியன் பீப்பிள் பார்ட்டி மற்றும் பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் என்று கிண்டலுடன் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Look at the quality of messaging. As a country stuck between the Indian Peoples Party and the Bharatiya Rashtriya Congress, can we even hope for more? #IndiaDeservesBetter https://t.co/3JU2Le5fx4
— Siddharth (@Actor_Siddharth) August 31, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout