கமல்ஹாசனை அடுத்து மாணவர்கள் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தந்த நடிகர்

  • IndiaGlitz, [Thursday,December 19 2019]

 

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடி வரும் நிலையில் போராடும் மாணவர்களுக்கு நேற்று கமல்ஹாசன் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இந்த நிலையில் கமலஹாசனை அடுத்து தற்போது நடிகர் சித்தார்த் அவர்கள் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்

இன்று அவர் மாணவர்களிடையே அவர் உரையாற்றும்போது ’ஆவணங்கள் எதுவும் இல்லாதவர்களுக்கு நாடு கிடையாதா? ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் ஆவணங்கள் இல்லை என்றால் குடியுரிமை கிடையாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? மற்ற மதத்தவர்களை மட்டும் ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை தரும் அரசாங்கம் இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் ஆவணங்களை கேட்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்

மேலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் போராடுவதற்கு உரிமை உள்ளது என்றும் உங்களுடைய கருத்துக்களை நீங்கள் அமைதியான வழியில் தெரிவிக்கலாம் என்றும் அதே நேரத்தில் போராடும் போது கவனமாக வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டும் என்றும் எந்த நிலையிலும் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் என்றும் கூறிய சித்தார்த் மாணவர்களை தூண்டி விடுவதாக கூறுவது தவறு என்றும் மாணவர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களை தெரிவித்து அமைதியான வழியில் போராடி வருகிறார்கள் என்றும் கூறினார் இந்த போராட்டத்திற்கு தனது ஆதரவை என்றும் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

More News

அஜித், விஜய்யை முந்திய இரண்டு முன்னணி நடிகர்கள்!

போர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டின் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் குறித்த பட்டியல்

பாஜகவில் இணைந்த பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்!

கடந்த சில மாதங்களாகவே மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜகவில் திரையுலக பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

என்னுடைய சொத்துக்கள் இந்த 3 பேருக்குத்தான்..! உயில் எழுதி வைத்துள்ள நித்தியானந்தா.

தனது சொத்துக்கள் 3 பேருக்கு மட்டுமே சொந்தம் என்று புதிய வீடியோவில் தெரிவித்துள்ள நித்யானந்தார், அந்த 3 பேரின் விவரங்களையும் வெளியிட்டுள்ளார்

"முதலில் நான் இந்தியன்.. மாணவர்களுக்காக கவலைப்பட வேண்டியது நம் கடமை" - இர்ஃபான் பதான்.

``அரசியல் பழி சொல்லும் விளையாட்டு தொடரட்டும். ஆனால், நானும் என்னுடைய நாடும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குறித்தும் அவர்களின் போராட்டம் குறித்தும் கவலைப்படுகிறோம்”

"வெள்ளையர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்த அரசும் செய்கிறது" - வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் வேளையில் பெங்களூரில் வரலாற்று ஆய்வார் ராமச்சந்திர குகா மற்றும் பலர் போராடியதற்காக கைது செய்யப்பட்டனர்