காதலிக்க கற்று கொள்ளுங்கள், அது உங்களை வாழ வைக்கும்: முத்த வீடியோ வெளியிட்ட சித்தார்த்..

  • IndiaGlitz, [Sunday,January 28 2024]

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள், அது உங்களை வாழவைக்கும் என்றும் காதல் தான் வாழ்க்கையில் எல்லாம் என்றும், நடிகர் சித்தார்த் கூறி இருப்பதோடு முத்தம் கொடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்

தமிழ் சினிமாவின் நடிகர்களில் ஒருவரான சித்தார்த் நடிப்பில் உருவான ’சித்தா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2; உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார். அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது செல்ல நாய்க்கு தொடர்ச்சியாக முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ’காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் நல்லபடியாக வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும். வாழ்வதற்காக காதலியுங்கள். காதல்தான் என் வாழ்க்கையில் எல்லாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு நடிகர் கௌதம் கார்த்திக், மகத் உள்பட பலர் கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.